ஞாபக மறதியை போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சித்த மருத்துவம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

ஒரு செயலைச் செய்ய வெவ்வேறு கோணத்தில் சிந்திக்க, பல்லாயிரக்கணக்கான தகவல்களை தன்னுள் பதித்துவைத்திருக்கும் மாபெரும் சக்தி மூளைக்கு உண்டு.

வயதாகும்போது மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய் அல்சைமர். இந்நோய் முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுமளவில் குறைந்தும், நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின் கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன முழுவதுமாய் குறைந்து விடும்.

நினைவாற்றல் அதிகரிக்க செய்ய வேண்டியவை

 • உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.

 • தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன.

 • எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருக்கும்.

 • சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம்.

 • புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

நினைவாற்றல் அதிகரிக்க உதவும் உணவு வகைகள்

 • கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின் வயது சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

 • வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.

 • நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.

 • ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் விட்டமின்கள் நிறைந்திருப்பதால் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும்.

 • ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும் மீன்களை உணவில் சேர்க்கப்படும்போது மூளையின் செயல்திறன் குறைபாடுகள் குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

 • நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.

 • நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.

 • தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.

 • வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers