சோம்பு தண்ணீர் குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

மணமிக்க உணவுப் பொருளில் ஒன்று சோம்பு. இத்தகைய சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இன்று பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனையான உடல் எடையைக் குறைக்க சோம்பு தண்ணீர் ஒரு சிறந்த பொருளாக உள்ளது.

மேலுல் சோம்பை விட சோம்பு ஊறவைத்த தண்ணீர் தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • சோம்பு- 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்- 1 லிட்டர்

செய்முறை

  • முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு பின்பு அதை இறக்கி அதனுடன் தேவையான அளவு சோம்பை சேர்த்து இரண்டையும் அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.

சோம்பு தண்ணீர் நன்மைகள்

  • சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் அளவுக்கு அதிகமாக ஏற்படும் பசியை அடக்கும். இதனால் தேவையற்ற உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.

  • சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

  • சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

  • சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

  • தினமும் காலையில் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

  • சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்