தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்லின் மகிமைகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் தோல் நோய், கண் எரிச்சல், வயிற்றுப் போக்கு, புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.

வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும்.

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்
  • அருகம்புல் சாற்றில் விட்டமின் 'ஏ' சத்து உள்ளது. மேலும் இதை குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்தால் உடல் புத்துணர்வு பெறும்
  • உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
  • பல் மற்றும் ஈறுகளில் உள்ள கோளாறுகளை குணப்படுத்த உதவுகின்றன.
  • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்துவது மிகவும் நல்லது.
  • நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
அருகபுல்லை பயன்படுத்தும் முறை
  • தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் அருகம்புலலை சிறிதளவு தண்ணீரில் இட்டு பின்பு அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து அதனை காய்ச்சி வடிகட்டி அத்துடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • தேவையான அளவு அருகம்புல் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, உடல் அரிப்பு குணமாகும்.
  • அருகம்புல் சிறிதளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து குடித்துவர மூலம், இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.
  • அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து குடித்துவர வெட்டை நோய் குணமாகும்.
  • அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி. ஆகியவற்றுடன் ½ தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers