வரகை அடிக்கடி உணவில் சேர்ப்பதனால் உண்டாகும் நன்மைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும்.

வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.

வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வருவதனால் உடலில் பல்வேறு நேய்களை விரட்டி அடிக்கின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்

  • அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
  • வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
  • ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.
  • நடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி , அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.
  • கண்களில் ஏற்படவிருகும் நரம்புநோய்களைத் முற்றிலும் தடுக்கும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.
  • கல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால், ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். மேலும் நமது உடலில் சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீராக்குகிறது.
  • மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்