புற்றுநோய்க்கு தீர்வு தரும் தூதுவளை...!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

தூதுவளையானது கற்ப மூலிகைளில் ஒன்றாகும். தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். இதன் வேரும் இலையும் கைப்பு மற்றும் கார்ப்பு சுவையுடையது. மேலும் தூதுவளைக்கு “கூதளம்” என்ற வேறு பெயரும் உண்டு.

புற்றுநோய் உள்ளவர்கள் அதன் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி வந்தால் சில மாதங்களிலே பூரண குணமடையலாம்.

தூதுவளையை சமையலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை முற்றிலும் நீங்கும்.

தூதுவளை கீரையை சிறிதளவு பருப்புடன் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தூதுவளையில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும். மேலும் தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும்.

தூதுவளையை தினுமும் பயன்படுத்தினால் தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.மேலும் தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட அறிவுதிறன் பெருகும்.

மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் போன்றவைகள் நீங்க தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்