சிறுநீரக கற்களை அகற்ற வேண்டுமா? இதை சாப்பிடுங்க

Report Print Jayapradha in ஆரோக்கியம்

இன்றைய இளம் தலை முறையினர் வேலைப்பளு காரணமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டதினாலும், சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

சிறுநீர் கற்களை அகற்ற அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.

இதிலுள்ள விட்டமின் பி6 இருப்பதால் இது மனித உடலில் அதிக அளவு ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை பெருக்க பெரிதும் உதவுகிறது, பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.

சிறிதளவு கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டு நம் உடலில் உள்ள தேவையற்ற பித்தத்தைத் தணிக்கும் வல்லமையும் மற்றும் அதனால் ஏற்படும் கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.

வாழைத் தண்டிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை மெலிவுடன் மாற்றும்.

பயன்படுத்தும் முறை
  • மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்க சிறிதளவு வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்துவது நல்லது.
  • மஞ்சள் காமாலை நோய் உடையவர்கள் வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேற வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர வேண்டும்.
  • மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலியை முழுமையாக நீக்க வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் நல்லது.
  • கல்லடைப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணப்படுத்த தினமும் வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர வேண்டும்.
செய்ய கூடாதவை
  • உடலில் குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டவர்கள் இதனை அருந்த வேண்டாம். ஏனெனில் வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி தன்மைக் கொண்டது.
  • வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
  • வழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்