ஒரு சிறிய கற்பூரத்திற்கு இவ்வளவு மகிமையா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

கோயில்கள் மற்றும் வீட்டில் ஆன்மிகப் பயன்பாட்டிற்கு மட்டுமே கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் இதை வைத்து சிறு சிறு வியாதிகளையும் குணப்படுத்த முடியும்.

பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூக்கு அடைப்பை சரிசெய்ய

கற்பூரம் ஒரு சிறந்த மூக்கு அடைப்பு நிவாரணியாகும், தூங்கச் செல்லும் முன்பு சிறிது கற்பூரம் எண்ணெய் வெதுவெதுப்பான கடுகு எண்ணெய், 1 மேசைக்கரண்டி கலக்கி அதனை மார்பு, தொண்டை சுவாசக்குழாய்களில் தேய்த்து வரவும்.

ஆழந்த தூக்கத்தை பெற்று தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க இது வழி செய்கிறது. எனவே இதனை உங்கள் மார்பில் ஒரு நாளைக்கு சில முறை தடவும் போது மூக்கு அடைப்பு அடைப்பிலிருந்து விடுபட முடியும்.

காயம் மற்றும் தழும்புகளை போக்க

உடலில் தோன்றும் குளிர் புண்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த மருந்து பொருளாக கற்பூரத்தை பயன்படுத்தலாம்.

காயங்களினால் ஏற்படும் தழும்புகள் அல்லது கொப்புளங்கள் இருக்கும் போது சாதாரணமாக தொற்று, வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும்.

கற்பூரம் எண்ணெயின் குளிர்ச்சி தழும்புகளை குணப்படுத்த உதவுகிறது. 3 துளிகள் கற்பூரம் அதனுடன் அத்தியாவசிய எண்ணெய் 1 தேக்கரண்டி உருகிய சுத்தமான தேங்காய் எண்ணெய் நன்றாக கலந்து இதனை புண்கள் மீது காட்டன் பேட் பயன்படுத்தி தடவவும். இதனை தினமும் 3 அல்லது, 4 முறை பயன்படுத்துவதன் மூலம் விரைவாக குணமடையலாம்.

தலையில் உள்ள பேன்களை ஒழிக்க

தலையில் உள்ள பேனை போக்குவதற்கு கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பயன்படுத்தினால் தீர்வு கிடைக்கும். தேங்காய் எண்ணைய் பேன்களை நசுக்கவும் கற்பூரம் அதன் நெடி காரணமாக பேன்களை கொல்லவும் உதவும்.

ஒரு மாதத்திற்கு 2 மற்றும் 3 முறை இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலை மற்றும் முடி வேர்கள் உள்ள இடங்களில் கற்பூரம் மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலக்கி தேய்து பின்பு அடுத்த நாள் ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

தசை வலியை குணப்படுத்த

உடம்பில் வலியுள்ள பகுதியில் கற்பூரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக மேம்படுத்தி தசை வலிகளை குறைக்கிறது.

கற்பூரத்தில் நோய் எதிர்ப்பிற்கு அழற்சி பண்புகள் அதிகம் உள்ளது. எனவே சிறிதளவு கற்பூரம் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வலி உள்ள இடத்தில ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு தடவை மசாஜ் செய்வதன் மூலமும் தசை வலி குணமாகும்.

இருமலை குணப்படுத்த

கற்பூரத்தின் நெடி நெருக்கடியான மார்பு, மூக்கடைப்பு மற்றும் மார்பு பகுதிகளில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல சிறந்த இயற்கை தீர்வை தரும்.

5 துளிகள் கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய், பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து மெதுவாக ஒரு சில நிமிடங்களில் இந்த எண்ணெய் கலவை உங்கள் மார்பில் தேய்ப்பதின் மூலம் பயன் பெறலாம்.

நாள்பட்ட இருமல் சிகிச்சையளிக்க ஒரு சொம்பு வெந்நீர் வைத்து கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய் ஒரு சில துளிகள் கலந்த கலந்த கலவையாய் ஆவி பிடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்