வாழைப்பழத் தோலை கொதிக்க வைத்த நீர்! இவ்வளவு நன்மையா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

பழத்தை போன்று அதன் தோலிலும் நிறைய நன்மைகள் உள்ளன.

வாழைப்பழம் தோல் நமது சரும பிரச்சனைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

வாழைப்பழ தோலின் நன்மைகள்
  • வாழைப்பழ தோலில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதால் உங்களது பற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். தினமும் உங்களது பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தேய்ப்பதால் உங்களது பற்கள் வெண்மையாகும்.
  • நாம் பலரும் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம். எனவே வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் உங்களது மன அழுத்த பிரச்சனை தீரும்.
  • மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்து நன்றாக தேய்க்க வந்தால் மருவானது நிரந்தரமாக மறையும்.
  • சொரியாசிஸால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழைப்பழ தோலை வைக்க வேண்டும். இதில் உள்ள ஈரபதமளிக்கும் தன்மையானது அரிப்புகளை சரி செய்யும். மேலும் சொரியாசிஸ் விரைவில் குணமாக இது உதவியாக இருக்கும்.
  • முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தடுக்கும். முகப்பருக்களின் மீது மிருதுவாக வாழைப்பழத்தின் தோலை வைத்து தேய்பதால் உங்களது முகத்தில் உள்ள பருக்கள் அழியும்.
  • தீக்காயங்கள் பட்ட இடத்தில் வாழைப்பழ தோலை 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருந்தால் முழுமையாக தீக்காயங்களினால் ஏற்பட்ட தழும்பு குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்