இனிமேல் இதன் இலையை தூக்கி போட்றாதீங்க!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

பப்பாளி பழத்தை போன்று அதன் இலையிலும் சத்துக்கள் அடங்கியுள்ளது, குறிப்பாக விட்டமின் ஏ மற்றும் பி இலையில் அதிகம் நிறைந்துள்ளது.

இதில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகம்.

  • இளம் வயதிலேயே பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் வர தொடங்கி விடும், இதனை சரி செய்ய பப்பாளி இலை டீ போதும், 5 அல்லது 6 இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும், நான்கில் ஒருபங்காக வந்ததும் குடித்து வந்தால் முகம் இளமையாகும்.
  • பப்பாளி இலையை நன்றாக அரைத்து அதனை குடித்து வந்தால், முகம் விரைவில் அழகாக மாறும். மேலும் கரும்புள்ளிகள் இருக்கும் ஆண்களின் முகத்தை ஜொலிஜொலிக்க வைக்கும்.
  • முகத்தில் பருக்கள் அதிகம் இருக்கும் ஆண்கள், பப்பாளி இலைச்சாற்றை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடங்களில் கழுவிவிடவும், இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

  • பொடுகு தொல்லையில் இருந்து விடுபட பப்பாளி இலை சாற்றை அரைத்து வடிகட்டி தலையில் தடவி 20 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
  • நம் உடலில் காயங்கள் ஏற்படும் இடத்தில் பப்பாளி சாற்றை 1 டேபிள்ஸ்பூன் எடுத்து கொண்டு 1 டீஸ்பூன் மஞ்சளை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி பின்னர் தடவி வந்தால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

செய்ய கூடாதவை

  • கர்ப்பிணி பெண்கள் பப்பாளி இலையின் சாற்றை குடித்தால் கருக்கலைப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • உடலில் அதிக அளவில் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இதனை குடிக்க வேண்டாம். உடலுக்கு வெளியில் ஏற்பட்ட தோல் வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  • வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு பப்பாளி இலை சாற்றை கொடுக்க கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்