என்றும் இளமைக்கு! கழுதைப் பாலின் அற்புதங்கள் தெரியுமா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

புரதச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச் சத்தை கொண்ட கழுதை பால் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்றது, ஏனெனில் இது சத்து மிகுந்த தாயின் சீம்பாலுக்கு நிகரான ஒன்றாக உள்ளது.

இதுதவிர விட்டமின் ஏ, தயாமின், ரிபோஃப்ளோவின், பி6(பைரிடாக்ஸின்), டி, இ, சி ஆகியவை உள்ளன.

மேலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள் காணப்படுகின்றன.

கழுதைப் பாலில் இம்யுனோக்ளோபுலின்ஸ்களான லோக்டோஃபெரின், லோக்டோபெர்ராக்சிடேஸ், லைசோசைம் போன்றவைகள் அதிகமாக இருப்பதால் குரல் வளம் நன்றாக இருக்க உதவும், மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்களும் அண்டாது.

அழகைப் பெருக்கும் கழுதைப்பாலின் பயன்கள்
  • கழுதை பாலானது குறைந்த கொழுப்பையும், கேசினையும் கொண்டுள்ளதால் இது நன்கு செரிமானமாகிறது. உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு குடலின் மீளுருவாக்கத்திற்கும் உதவுகிறது.
  • தாய்ப்பாலில் உள்ள பிஎச் மதிப்பினை போன்றே கழுதைபாலின் பிஎச் மதிப்பு 7-7.2 உள்ளதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது. ஆகவே பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கழுதை பால் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

  • கழுதை பாலினை உபயோகித்தால் அதில் உள்ள பக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் உள்ள சருமக்கோளாறுகளை சருமநோய்கள், சருமஅழற்சி, சோரியாஸிஸ், பருக்கள் ஆகியவை குணமாகின்றன.
  • சீரான உடல்வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட கழுதை பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கழுதைபாலில் அதிக அளவு நுண்ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.

  • கழுதை பாலானது நன்கு செரிமானம் ஆவதுடன் மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. எந்த வயதினரும் இப்பாலினை உண்டு மலச்சிக்கலுக்கு தீர்வினைப் பெறலாம்.
  • கழுதை பாலானது கல்லீரலில் உண்டாகும் நச்சுஅழற்சியினைப் போக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்புடையவர்கள் இப்பாலினை உண்டு நிவாரணம் பெறலாம்.
  • வெதுவெதுப்பான கழுதை பாலினை அருந்தும் போது தொண்டடைக் கட்டு முதலில் சரியாகி பின் படிப்படியாக இருமல் குறைகிறது.

  • தொடர்ந்து ஒரு மாதம் இதனை அருந்தும்போது சுவாச கோளாறுகள் சரியாகின்றன. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன.
  • இதிலுள்ள ஒமேகா-3 இதய நோயிலிருந்தும் மூளையின் செயல்பாட்டினை அதிகரிப்பதோடு ஞாபகத்திறனையும் மேம்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்