இந்த மூன்று பொருட்களே போதும்! நாள்பட்ட மாதவிடாய் சரியாகும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக மாதவிடாய் 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வரும். இதன் உதிர போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் ரத்தத்தின் கால அளவு அவர்களின் உடல் அமைப்பை பொறுத்ததே.

ஒரு பெண்ணிற்கு ஒரு வருடத்தில் 11 முதல் 13 மாதவிடாய் வர வாய்ப்பு உள்ளது.

பலருக்கு இந்த உதிர போக்கு வருடத்திற்கு 5 அல்லது 7 முறைதான் வர கூடும். இதனை தான் ஒழுங்கற்ற மாதவிடாய் என்பார்கள்.

இதனை குணப்படுத்த பல வழிகளையும் உள்ளன. அவற்றில் நம் முன்னோர்கள் கையாண்ட இலகுவழிகளை பார்ப்போம்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் மாதவிடாய் வலியை குணப்படுத்தும். மேலும் மாதவிடாய் தாமதமாக வந்தால் அதனையும் சரி செய்யும்.

தினமும் காலை,மாலை என இரு வேலைகளிலும் இஞ்சி டீ குடித்தால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

எள்ளு

உடலின் ரத்த போக்கை சீராக வைத்து ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது. இதனால் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சினை விரைவில் குணமடையும்.

மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்கள் உற்பத்திக்கும் நன்றாக உதவும்.

எள்ளு மற்றும் வெல்லத்தை தூளாக செய்து, சாப்பிட்டு வந்தால் இது குணமடையும்

இலவங்கபட்டை

மாதவிடாய் சுழற்சியை சீரான முறையில் வைக்க இலவங்கம் நன்கு பயன்படுகிறது.

ஒரு குவளை பாலில் 1/2 டீஸ்பூன் இலவங்க தூளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இது குணமடையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்