95 வயதிலும் நோய்க்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

95 வயதில் கருணாநிதியின் இதயம் ஆரோக்கியமாகத் துடித்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம், அவர் இத்தனை ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட ஆரோக்கிய உணவுகளுடன் உடற்பயிற்சியுமே ஆகும்.

கருணாநிதி இரவு எத்தனை மணிக்குப் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவார்.

சர்க்கரை உட்பட எவ்விதமான நோய்களும் அவரை நெருங்கியதில்லை.

பூப்பந்து, கபடி இரண்டும் அவருக்குப் பிடித்த விளையாட்டுகள்.

31 வயதில் கார் விபத்தில் சிக்கிய கருணாநிதியின் கண்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால், அன்றிலிருந்து கண்ணாடி அணிந்து வருகிறார்.

காலையில் கண்ணாடியை அணிந்தால் இரவு உறங்கச் செல்வதற்கு முன்புதான் கழட்டுவார்.

உணவு விடயத்திலும் கருணாநிதி மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். சாப்பாட்டில் தேங்காய் பயன்பாடு அறவே ஆகாது. இட்லிக்குக் கூட தேங்காய்ச் சட்னி வைத்துக்கொள்ள மாட்டார். கொத்தமல்லி சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார்தான் ஊற்றிக்கொள்வார்.

ஆப்பம் என்றால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பசும்பால் சேர்த்துக்கொள்வார். எண்ணெயும் குறைவாகப் பயன்படுத்துவார்.

முன்பெல்லாம் மதியம் 12 மணிக்கு சிக்கன் சூப் குடிப்பார். வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு சிக்கன் , மட்டன் சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட்டார், சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் ஆகிவிட்டது. சூப் குடிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு ஒரு கப் காபி குடிப்பார்.

வெயில் காலமென்றால் காபிக்குப் பதில் இளநீர். மாதம் மூன்று முறை மீன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திரவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் கருணாநிதி.

மதிய சாப்பாட்டில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். கத்தரிக்காய், முள்ளங்கி விரும்பிச் சாப்பிடுவார். குழம்புதான் விரும்புவார். வறுவல், பொறியல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டார். மாலை நேரத்தில் தோசை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் பிரெட் சாப்பிடத் தொடங்கினார்.

டீயில் தொட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். இரவு, இரண்டு சப்பாத்தியும் குருமாவும். திராட்சை, சப்போட்டா, பப்பாளி, பேரிச்சம்பழங்களும் சாப்பிடுவார்.

வெயிலோ, பனியோ, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றையும் செய்யத் தொடங்கினார்.

கடும் யோகா செய்யும் கருணாநிதிஉழைப்புக்கு மத்தியில் ஆரோக்கியத்தின் மேல் அவர் காட்டிய அக்கறைதான் உடல் வலிமைக்கு மட்டுமன்றி மன வலிமைக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்