நெய் ஆபத்தான ஒன்றா? உடல் எடையை அதிகரிக்குமா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

எத்தனை வகை எண்ணெய் வஸ்துக்கள் இருந்தாலும் அவற்றில் மிகச் சிறந்தது பசு நெய்யே.

ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடையதாக பசு நெய்யைத்தான் குறிப்பிடுகிறார்கள்.

பசு நெய் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அப்பொருளின் சுவை மற்றும் செயல்படும் திறனை அதிகரித்து விரைவாக மூளையைச் சென்றடைந்து சிந்தனைத்திறன், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை அதிகரிக்கச் செய்கிறது.

நெய்யினை தயார் செய்யும் முறை

தயிர் சரியான பக்குவம் அடைந்தவுடன் அதை முறையாகக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெயை எடுத்து கொள்ளவும்.

பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சேகரிக்கப்படும் வெண்ணெயை சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது வெண்ணெயில் உள்ள நீரானது ஆவியாகி கொழுப்பு அமிலங்கள் மட்டும் தனியே பிரிந்து நிற்கும். இதனையே நாம் நெய் என்கிறோம்.

நெய்யின் மருத்துவப் பண்புகள்
  • நெய்யில் நீரில் கரையும் விட்டமின்களான A மற்றும் E அதிக அளவு உள்ளது. நம் கண்களின் பாதுகாப்பிற்கு விட்டமின் A இன்றியமையாதது. உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட விட்டமின் E உதவுகிறது.
  • பசு மாட்டினுடைய பாலில் இருந்து கிடைக்கும் சுத்தமான நெய்யில் விட்டமின் K2 என்ற ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் நம் உடலுக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது.
  • நம் உடலிலுள்ள உள்ள ஈரலுக்கு தேவையான அதிக அளவு ஆற்றலை நெய்யில் உள்ள மிடியம் ச்ஹைன் கொழுப்பு அமிலம் நேரடியாக நமக்குத் தேவையான ஆற்றலைக் அதிகம் கொடுக்கிறது. இதனால் அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் உகந்தது.
  • நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் அதிக அளவு உள்ளதால் நம் உடலில் சீரான செரிமானம் நடைபெற உதவுகிறது.
  • தாயின் கருவிலுள்ள குழந்தையின் மூளை நன்கு வளர நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் போன்றவை உதவுகிறது.
  • லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் கேசீன் சகிப்புத்தன்மை பிரச்னை குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும்.அவர்களால் பால் சாப்பிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு நெய் சாப்பிட கொடுக்கலாம்.

அளவோடு பயன்படுத்தவும்

நெய்யானது அதிகளவு கொழுப்பினைக் கொண்டுள்ளதால் இதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதோடு பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

பசு நெய்யை தகுதியானவர்கள், தகுதியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல்பருமன் ஏற்படாது. உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும்

நெய்யை அதிகமாக விரும்பி சாப்பிடுவோர்க்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். இதனால் ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம், மாலை மற்றும் இரவு போன்ற நேரங்களில் மதிய நேரமே உடலில் பித்தம் அதிகரித்து இருக்கும் என்பதால், மதிய உணவில் முறையாக தயாரிக்கப்பட்ட பசு நெய்யை சேர்த்துக்கொள்வது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்