சரஸ்வதி கீரையின் மருத்துவ பலன்கள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்
163Shares

வல்லாரை அல்லது சரஸ்வதி கீரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும்.

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர்சத்து ஏ, உயிர்சத்து சி மற்றும் தாது உப்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன.

இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

காலை வேளையில் சாப்பிடுவதால்
 • பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
 • ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
 • மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
பயன்கள்
 • வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண்(Ulcer), குடல் நோய், வாய்ப்புண்(Mouth ulcer), வாய் நாற்றம்(Bad Breath) ஆகியவை அகலும்.
 • தினமும் உணவுடன் சேர்த்து உண்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.

 • உடலில் தோன்றும் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாக்கும்.
 • இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
 • உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைத்து உண்டு வந்தால் மலச்சிக்கலை அகற்றும்.
 • குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் அளவு, தினமும், காலை, மாலை வேளைகள், ½ டம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்துவர வேண்டும்.
 • பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் தோன்றும் கோளாறுகளை குணப்படுத்த வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சரியாகும்.

 • முற்றிய மஞ்சள் காமாலை உள்ளவர்கள் வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
 • கடுமையான இதய நோயால் பதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்