உடல் எடை குறைக்கும் டயட் ப்ளான்: 4 வாரத்தில் பலன்

Report Print Printha in ஆரோக்கியம்
425Shares
425Shares
ibctamil.com

டயட் என்பது நாம் அன்றாடம் சாப்பிடக் கூடிய உணவை அளவாக உண்பதே ஆகும். அதன்படி, உடல் எடையைக் குறைக்க இந்தியன் டயட் திட்டம் பெரிதும் உதவுகிறது.

வாரம் - 1

 • அதிகாலை - விருப்பமான ஏதேனும் ஒரு பழத்துடன், சிறிது தர்பூசணி, ஆளி மற்றும் எள் விதைகளை சாப்பிட வேண்டும்.

 • காலை உணவு - பன்னீர் சாண்ட்விச் உடன் புதினா சட்னி, இட்லியுடன் சாம்பார், முட்டை ஆம்லெட், 2 முழு தானிய பிரட், நவதானிய காய்கறி பரோட்டா மற்றும் 1 டம்ளர் விருப்பமான காய்கறி ஜூஸ்.

 • காலை உணவிற்கு பின் - 4 வால்நட்ஸ் மற்றும் 2 பேரிச்சம் பழம், விருப்பமான ஏதேனும் ஒரு பழம் அல்லது இளநீர்.

 • மதிய உணவிற்கு முன் - 1 கப் வினிகர் தூவிய சாலட்.

 • மதிய உணவு - 2 நவதானிய ரொட்டி அல்லது 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம், 1 கப் தால் மற்றும் 1 கப் கொழுப்பு குறைவான தயிர்.

 • மதிய உணவிற்கு பின் - 1 டம்ளர் டீ அல்லது காபி மற்றும் 1 டம்ளர் மோர்.

 • மாலை நேர ஸ்நாக்ஸ் - ஏதேனும் 1 பழம், 1 டம்ளர் வே புரோட்டீன் பானம் அல்லது 1 கப் முளைக்கட்டிய பயிர்.

 • இரவு உணவு - 1 கப் சிக்கன் கிரேவி, 1 கப் சாதம், 2 நவதானிய ரொட்டி, சாலட், 1 கப் கொழுப்பு குறைவான தயிர், 1 கப் வெஜிடேபிள் உப்புமா, 1 கப் சாம்பார், 1 கப் சாலட் அல்லது சூப்.

 • இரவு உணவிற்கு பின் - 4-5 துண்டுகள் நட்ஸ், 1 டம்ளர் கொழுப்பு குறைவான வெதுவெதுப்பான பால்.

வாரம் - 2

 • அதிகாலை - 10 மிலி அருகம்புல் ஜூஸ், 5-6 பாதாம் மற்றும் வால்நட்ஸ்.

 • காலை உணவு - 2 காய்கறி ஊத்தாப்பம் மற்றும் சாம்பார், 1 கப் வெஜிடேபிள் உப்புமா மற்றும் சட்னி, 2 ராகி தோசை மற்றும் சாம்பார், 1 கப் பழம், ஆளி விதை மற்றும் ஓட்ஸ் கஞ்சி, 1 கப் கைக்குத்தல் அரிசி பொங்கல் மற்றும் சாம்பார்.

 • காலை உணவிற்கு பின் - 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக் மற்றும் இளநீர்.

 • மதிய உணவிற்கு முன் - 1 கப் அதிக காய்கறி சேர்த்த மைன்ஸ்ட்ரோன் சூப்.

 • மதிய உணவு - 2 நவதானிய ரொட்டி, 1 கப் வெஜிடேபிள் சப்ஜி, 1 கப் வேக வைத்த பருப்பு மற்றும் கைக்குத்தல் அரிசி சாதம், 1 கப் மிக்ஸ்டு வெஜிடேபிள் சப்ஜி, 1 வெஜிடேபிள் முட்டை ஆம்லெட்.

 • மாலை நேர ஸ்நாக்ஸ் - விருப்பமான ஏதேனும் ஒரு பழம் மற்றும் 1 கப் க்ரீன் டீ.

 • இரவு உணவு - 1 கப் வெஜிடேபிள் புலாவ், பாசுமதி சிக்கன் பிரியாணி, 1 கப் வெஜிடேபிள் ரெய்தா, வெஜிடேபிள் அல்லது சிக்கன் சாலட், 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம், மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார், 1 கப் அசைவ அல்லது சைவ சப்ஜி சாலட், 2 நவதானிய ரொட்டி, 1 கப் மீன் குழம்பு மற்றும் தயிர்.

 • இரவு உணவிற்குப் பின் - 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்

வாரம் - 3

 • அதிகாலை - 10 ஸ்பைரூலினா அல்லது பச்சை இலை காய்கறி ஜூஸ் மற்றும் விருப்பமான ஏதேனும் 1 பழம்.

 • காலை உணவு - 1 கப் முளைக்கட்டிய காய்கறி உப்புமா, 2 ஓட்ஸ் இட்லி மற்றும் சாம்பார், 2 வெந்தய கீரை பராத்தா உடன் கொழுப்பு குறைவான தயிர், 2 காய்கறி அடை ஊத்தாப்பம், 1 கப் வெஜிடேபிள் சாம்பார்.

 • காலை உணவிற்கு பின் - விருப்பமான ஏதேனும் 1 பழம்.

 • மதிய உணவிற்கு முன் - 1 கப் முளைக்கட்டிய பயிர் சாலட்.

 • மதிய உணவு - 2 நவதானிய ரொட்டி, 1 கப் சைவ அல்லது அசைவ சப்ஜி, 1 கப் கெட்டியான தால் மற்றும் கைக்குத்தல் அரிசி சாதம், வெஜிடேபிள் சாம்பார், சப்ஜி மற்றும் கொழுப்பு குறைவான தயிர்.

 • மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 கப் ஸ்பைரூலினா மற்றும் மிக்ஸ்டு வெஜிடேபிள் ஜூஸ்.

 • இரவு உணவு - 1 கப் பழம் மற்றும் காய்கறி சாலட், 2 கோதுமை ரொட்டி, அசைவ சப்ஜி, 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் தயிர்.

 • இரவு உணவிற்கு பின் - 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக்.

வாரம் - 4

 • அதிகாலை - 10 மிலி நெல்லிக்காய் ஜூஸ், 3-4 வால்நட்ஸ் மற்றும் பாதாம்.

 • காலை உணவு - 2 சப்பாத்தி, கொழுப்பு குறைவான தயிர், 2 வெஜிடேபிள் ராகி பட்டூ மற்றும் வேர்க்கடலை சட்னி, 2 வெஜிடேபிள் தோசை, 1 கப் வெஜிடேபிள் ரெய்தா மற்றும் பன்னீர், தயிர் மற்றும் 2 இட்லியுடன் சாம்பார்.

 • காலை உணவிற்கு பின் - 3-4 உலர் பழங்கள், 1 கப் நற்பதமான பழங்கள்.

 • மதிய உணவிற்கு முன் - 1 கப் முளைக்கட்டிய பயிர் சாலட், 1 கப் க்ரில் சிக்கன் அல்லது மீன் சாலட்.

 • மதிய உணவு - 1 கப் திணை மற்றும் பருப்பு கிச்சடி, வெஜிடேபிள் கடாய், 2 நவதானிய ரொட்டி, 1 கப் அசைவ சப்ஜி அல்லது முட்டை சப்ஜி, 1 டம்ளர் மசாலா மோர், 2 வெஜிடேபிள் திணை ஊத்தாப்பம் மற்றும் சாம்பார்.

 • மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 கப் மசாலா சோளம், 1 கப் காபி, டீ அல்லது க்ரீன் டீ, விருப்பமான 1 பழம், 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக்.

 • இரவு உணவு - 1 கப் வெஜிடேபிள் மற்றும் மிக்ஸ்டு சீட்ஸ் சாலட், 2 நவதானிய ரொட்டி, 1 அசைவ சப்ஜி அல்லது 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம்.

 • இரவு உணவிற்கு பின் - 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்தியன் டயட் திட்டம் அனைவருக்குமே பொருந்தாது. எனவே ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைப்படி நம் உடலுக்கு ஏற்ற டயட்டை பின்பற்றுவது மிகவும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்