ஆப்பிளில் உள்ள கிருமி நாசினியை முற்றாக நீக்குவதற்கான வழிமுறை கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
83Shares
83Shares
lankasrimarket.com

அதிகளவானவர்கள் விரும்பி சாப்பிடும் பழ வகைகளுள் ஒன்றாக ஆப்பிள் காணப்படுகின்றது.

இவ்வாறான ஆப்பிள்களில் அதிகம் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் நோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது.

நோய்த் தாக்கத்தை தவிர்ப்பதற்கு நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனாலும் இவ்வாறு கழுவுவதன் மூலம் கிருமி நாசினிகள் முற்றாக நீக்கப்படுவதில்லை.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பேக்கிங் சோடா மற்றும் நீரை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்துவது மிகசி சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

Massachusetts பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தொடர்பான அறிக்கைகள் கடந்த 25ம் திகதி Journal of Agricultural and Food Chemistry சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பழங்கள் மற்றும் காய் கறிகளில் உள்ள கிருமி நாசினிகளை நீக்குவதற்கும் இம் முறையினைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்