2030 ஆம் ஆண்டில் தாக்க வரும் உடல்பருமன் நோய்: ஓர் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

சம காலத்தில் செயற்கை முறையில் அதிகளவான உணவு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

இச் செயற்கை உற்பத்தி உணவுகள் குறைந்த போசனைகளைக் கொண்டதாக இருப்பதே இதற்கு பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ் உணவுகளைப் பயன்படுத்துவதனால் 2030ம் ஆண்டளவில் உலக நாடுகளில் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் அதீத உடல் பருமன் நோய்க்கு ஆளாகக் கூடிய சாத்தியம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 5 வயதிற்கு உட்பட்ட குழுந்தைகளில் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய்கள், உட்பட உணவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments