வெறும் வயிற்றில் இஞ்சிப்பால் குடித்தால் என்ன கிடைக்கும்?

Report Print Printha in ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு சத்துகள் இஞ்சியில் இருப்பதால், இதனை இஞ்சிபால் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – சிறிய துண்டு
  • தண்ணீர் – 2 கப்
  • காய்ச்சிய பால் – 1 கப்
  • சர்க்கரை – தேவையானவை

செய்முறை

சிறிதளவு இஞ்சி துண்டினை எடுத்துக் கொண்டு அதனுடைய தோல் சீவி, நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் தேவையான அளவு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அந்த தண்ணீரில் இஞ்சியின் சாரம் முழுவதும் இறங்கியவுடன், அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி காய்ச்சிய பாலை அதில் கலக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு இனிப்புச் சுவை உள்ள தேன், பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • நுரையீரல் சுத்தமாக்கப்பட்டு, சளி போன்ற தொல்லையில் இருந்து விடுபட வைக்கிறது.
  • நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு வாயுத் தொல்லை வராமல் தடுக்கிறது.
  • உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப்பாலை குடிப்பதால், தொப்பைகள் மற்றும் அதிகப்படியான உடல் எடைகள் குறைந்துவிடும்.
  • ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் அதனை நீக்கி விடும். அதனால் ஏற்படும் மாரடைப்பை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
  • பெண்கள் இஞ்சிபாலை குடிப்பதன் மூலம் சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் வராமல் பாதுகாக்கிறது.
  • மூன்று வயதிற்கு மேல் உள்ள அனைவரும் இந்த இஞ்சிப்பாலை வெறும்வயிற்றில் தினமும் குடித்தால், உடம்பு எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கு.
குறிப்பு

வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் போன்ற நோய்கள் இருப்பவர்கள் இஞ்சிப்பாலை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments