ரஷ்யாவுக்காக சொந்த நாட்டை உளவு பார்த்த ஜேர்மானியர்! வழக்கு தொடர்ந்த பெடரல் வழக்கறிஞர்

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

ரஷ்யாவுக்காக சொந்த நாட்டு பாராளுமன்றத்தில் உளவு பார்த்ததாக ஜேர்மானியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தலைநகர் பெர்லினில் உள்ள பாராளுமன்றத் தளத் திட்டங்கள் குறித்த தகவல்களை ரஷ்ய ரகசிய சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்ததற்காக Jens F. என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர் மீது ஜேர்மனியின் பெடரல் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Jens F. பல ஆண்டுகளாக பாராளுமன்றத்திற்கு மின்னணு சாதனங்களில் சேவைகளை வழங்கும் ஒரு ஒப்பந்தக்காரருக்காக பணிபுரிந்து வந்தார். அதனால், அவருக்கு பாராளுமன்ற கட்டிடத்தின் தளவமைப்புகளைக் (buildings’ layouts) கொண்ட PDF files-களைப் பார்க்க ஆக்சஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில், அவர் தளத் திட்டங்கள் குறித்த தகவல்களை ரஷ்ய உளவுத்துறைக்கு வழங்க முடிவு செய்து ரஷ்ய தூதரகத்தில் உள்ள ரகசிய சேவையின் பணியாளருக்கு அனுப்பியுள்ளதாக, பெடரல் வழக்கறிஞர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்