ஜேர்மனியில் புதிய கொரோனா வைரஸின் மையப்புள்ளி கண்டுபிடிப்பு... அச்சத்தில் மக்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மன் நகரம் ஒன்று திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, நாட்டு மக்களிடையே அச்சம் பரவத்தொடங்கியுள்ளது.

Flensburg என்ற அந்த நகரில், மேலும் மேலும் நடுத்தர வயதினர், எந்த உடல் நலக்குறைவும் இல்லாத ஆரோக்கியமானவர்கள், புதிய கொரோனா தொற்று ஒன்றினால் உயிருக்கு போராடி வருவதாக அங்குள்ள புனித பிரான்சிஸ் என்னும் மருத்துவமனையின் தலைவரான Klaus Deitmaring தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற பிரித்தானிய வகையான B.1.1.7 என்னும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகலாம் என்றும், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் என தாங்கள் அஞ்சுவதாக Klaus தெரிவித்துள்ளார்.

இது ஓரிடத்தில் காணப்படும் பரவல் அல்ல என்று கூறும்