சீனாவுக்கு சென்றால்... ஜேர்மனி தன் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனி தன் குடிமக்கள் சீனாவுக்கு செல்வதற்கெதிராக கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

சீனாவுக்கு செல்பவர்கள் பல வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதோடு, அவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் கூட, சீனா அவர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரித்து, மீண்டும் மீண்டும் அவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்பதால், சீனாவுக்கு செல்வதற்கெதிராக தன் குடிமக்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தப்படுவோருக்கு தினமும் இரத்தம் சேகரிக்கப்பட்டு சோதனைகள் செய்யப்படும் என்றும் கணினி மூலம் இயங்கும் ஸ்கேன்களுக்கும் அவர்கள்

உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தங்க அனுமதிக்கப்படும் நிலையில், 14 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய பிள்ளைகள் தங்கள் பெற்றொரிடமிருந்து பிரிக்கப்பட்டு, வேறு இடங்களில் தனியறைகளில் அடைக்கப்படுவார்கள்.

சமீபத்தில், ஜேர்மானியர்கள் இருவர் சீனா சென்றபோது, அவர்கள் பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே இருவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருந்தாலும், தினமும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்தே, ஜேர்மன் மக்களுக்கு சீனாவுக்கு செல்வதற்கெதிராக எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

இதற்கிடையில், தங்கள் குடிமக்கள் நடத்தப்பட்ட விதத்திற்காக, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் சீனாவிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்