ஜேர்மன் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த மொடல் அழகி! பிரபல கால்பந்து வீரருக்கு தொடர்பா? பொலிஸ் முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி
0Shares

பிரபல கால்பந்து வீரர் Jerome Boateng-ன் காதலி Kasia Lenhardt அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

25 வயதான மொடல் Kasia Lenhardt, பெர்லினில் உள்ள குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மரணத்தில் சந்தேகம் ஏதுமில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Kasia இறந்ததை சக மாடல் அழிகி Sara Kulka அவரது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினர்.

இதற்கு முன் ஒருவருடன் உறவிலிருந்த Kasia-வுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலனை பிரிந்த Kasia, கடந்த 15 மாதங்களாக 32 வயதான கால்பந்து வீரர் Jerome Boteng-வுடன் டேட்டிங் செய்து வந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 2ம் திகதி Kasia Lenhardt-Jerome Boteng ஜோடி பிரிந்தனர். பிளாக்மெயில் மற்றும் துரோகம் காரணமாக இருவரும் பிரிவதாக தெரிவிக்கப்பட்டது.

கால்பந்து வீரரை 'பிசாசு' என்று முத்திரை குத்திய Kasia, தான் பிரிவினால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டவுடன் கண்டிப்பாக இந்த விஷயம் குறித்து பேசுவேன் என சபதம் செய்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்