உலகில் அதிக மில்லியனர்களை கொண்ட நாடுகள்... முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?

Report Print Santhan in ஜேர்மனி

உலகில் அதிக டொலர் மில்லியனர்களை கொண்ட நாடுகளில் ஜேர்மனி மூன்றாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜேர்மனியில் மில்லியனர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆலோசனை நிறுவனமான காப்ஜெமினியின் (World Wealth Report 2020) கூறுகிறது.

ஒரு மில்லியன் டொலர்களோ அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை கொண்ட ஜேர்மனியர்களின் எண்ணிக்கை 1.46 மில்லியன் என் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை Spiegel குறிப்பிட்டுள்ளது.

இந்த குழு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 100,000-க்கும் அதிகமான மக்கள், அதாவது 8.6 சதவீதம் பேர் வளர்ந்துள்ளனர்.

தரவரிசைப்படி, அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி மூன்றாவது பெரிய டொலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது.

ஜேர்மனி 2019-ஆம் ஆண்டில் மந்தநிலையிலிருந்து தப்பித்த போதிலும் ஆண்டு முழுவதும் கணக்கிடப்பட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரம் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது.

காப்ஜெமினியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு, வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் இருந்தபோதிலும். உலகளவில் டொலர் மில்லியனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்பது சதவிகிதம் உயர்ந்துள்ளது.

உலகில் உள்ள செல்வந்தர்களின் நிகர மதிப்பு 2019-ஆம் ஆண்டின் இறுதியில் 74 டிரில்லியன் டொலர்களாக உயர்ந்தது.

இது 2018-ஆம் ஆண்டிலிருந்து 8.7 சதவிகிதம் அதிகம், அதுவே 2012 டிசம்பரில் 46 டிரில்லியன் டொலர்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்திலும், இதற்கு அடுத்த படியாக ஜப்பான் 3.4 மில்லியன் மில்லியனர்களுடன் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்திலும் உள்ளது. ஜேர்மனி, சீனா (2019-ல் 1.3 மில்லியன்) மற்றும் பிரான்ஸ் (0.7 மில்லியன்)-களுடன் உள்ளது.

தற்போது கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நிலையை பார்க்கும்போது 2020-ஆம் ஆண்டிற்கான பார்வை கணிசமாக வேறுபடலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்