ஜேர்மனியில் தவறான இடத்தில் நிர்வாணமாக சிக்கிக்கொண்ட இளம்பெண்ணின் கதை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1522Shares

தனது ஆண் நண்பருடன் ஜேர்மனிக்குச் சென்ற இளம்பெண் ஒருவர், நீராவிக்குளியல் போடும் இடம் என நினைத்து, தீப்பிடித்தால் தப்பிச்செல்லும் இடத்தில் சென்று மாட்டிக்கொண்டுள்ளார்.

ஜேர்மன் மொழி தெரியாத Anbara Salam என்ற அந்த பெண்ணும் அவரது காதலரும் சுவிட்சர்லாந்திலிருந்து எல்லையைக் கடந்து ஜேர்மனியிலுள்ள Stuttgartக்கு அருகிலுள்ள ஒரு சிறு நகரத்திற்கு வந்திருக்கிறார்கள்.

ஸ்பா ஒன்றிற்குச் சென்று நீராவிக்குளியல் போட முடிவு செய்த Anbara, தனது காதலரை ஒரு மணி நேரத்தில் காபி ஷாப்பில் சந்திப்பதாகக் கூறிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

ஜேர்மன் ஸ்பாக்கள் நிர்வாணக் குளியலுக்கு பேர் போனவை என்பதால், உடைகளைக் களைந்து நிர்வாணமாக, கையில் முகம் துடைக்கும் ஒரு துண்டுடன் ஒரு அறைக்குள் நுழைந்திருக்கிறார் Anbara.

மொழி தெரியாததால் ஏதோ ஒரு அறைக்குள் குத்து மதிப்பாக நுழைய, பார்த்தால், அது ஆண்களில் குளியலறை!

அங்கிருந்தவர்கள் Anbaraவைப் பார்த்ததும் குஷியாகிக் கூச்சலிட, கதவை அடைத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.

cnn

சரி, ஆண்கள் குளியலறைக்கு எதிரேதான் பெண்கள் குளியலறை இருக்கும் என உத்தேசமாக இன்னொரு அறைக்குள் நுழைய, அவருக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் அது குளியலறை அல்ல, தீப்பிடித்தால் தப்புவதற்காக அமைக்கப்பட்டிருந்த வழி.

ஆனால், வெகு காலமாக அந்த கட்டிடம் தீப்பிடிக்கவில்லை போலும், அந்த இடத்தை பயன்படுத்தி வெகு காலமாகிவிட்டதுபோல் அழுக்கடைந்து போயிருக்கிறது அந்த இடம்.

பயந்து நடுங்கி, அங்கும் இங்கும் ஓடி, கடைசியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் ஒரு லிப்ட் இருப்பதைக் கண்டு அதில் ஏறியிருக்கிறார் Anbara.

அதற்குள் ஒரு கமெரா இருக்க, இருந்த சின்ன துண்டால் மானத்தை மறைத்துக்கொண்டு, கமெராவைப் பார்த்து கையசைத்திருக்கிறார்.

நல்ல வேளையாக யார் கண்ணிலோ அவர் பட, அங்கிருந்து ஒரு பதின்ம வயது சிறுவன் இவரை அழைத்துகொண்டு சென்றிருக்கிறான்.

அவனுக்கோ Anbaraவை பார்க்க வெட்கம், இவருக்கோ ஒரு குழந்தை முன்னால் இப்படி நிற்கிறோமே என அவமானம்.

கடைசியாக ஒரு தெருவைக் கடந்து வாசல் வழியாக ஹொட்டலுக்குள் சென்றிருக்கிறார்கள் இருவரும். அங்கே ஹொட்டலுக்குள் செல்ல ஒரு நீண்ட வரிசை...

மக்களெல்லாம் வேறு கிரகத்திலிருந்து வந்த ஜந்துவைப்போல் Anbaraவைப் பார்க்க, ஒரு வயதான பெண்மணி பரிதாபப்பட்டு தன் கையிலிருந்த நீந்தும்போது தலையில் அணிந்துகொள்ளும் தொப்பியைக் கொடுக்க, அதை வைத்து அரைகுறையாக உடம்பை மறைத்துக்கொண்டு நின்றிருக்கிறார் Anbara.

ஹொட்டலில் ரிஷப்ஷனில் இருந்த பெண், ஐ டி கொடுங்கள் என்று கேட்டுவிட்டு, இவர் இருந்த நிலையைப் பார்த்துவிட்டு உடை மாற்றும் அறை ஒன்றிற்குள் அனுப்பியிருக்கிறார்.

ஒரு வழியாக வெட்கம் பிடுங்கித் தின்ன உடை ஒன்றை அணிந்துகொண்டு காதலரைப் பார்க்க ஓடியிருக்கிறார் Anbara.

அங்கே போனால் Anbaraவின் காதலர் கேட்டாரே ஒரு கேள்வி... ஏன் ஒரு மணி நேரம் லேட்? இப்போது அவர் Anbaraவின் காதலர் இல்லையாம்... நியாயம்தானே!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்