ஜேர்மனியின் நிலை குறித்து நாட்டின் நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி
313Shares

ஜேர்மனி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாட்டின் நோய் கட்டுப்பாடு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிறுவனமான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் (ஆர்.கே.ஐ) சமீபத்திய தகவல்களின்படி, ஜேர்மனியில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் 9,113 பேர் தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர், ஜேர்மனி மொத்தம் 1,78,570 கொரோனா வழக்குகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளில், 1,61,200 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனாவால் ஜேர்மனியில் 8,257 பேர் இறந்துள்ளனர் என நிறுவனமான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்