தாயைக் காணாமல் கண்ணீருடன் பொலிசாரை அழைத்த சிறுவன்: பொலிசாரின் ரெஸ்பான்ஸ்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அம்மாவைக் காணவில்லை என்பதற்காக பொலிசாரை அழைத்துள்ளான் பவேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன்.

அந்த சிறுவனின் தாய் வெளியே எங்கோ சென்றிருக்கிறார், ஆனால் அந்த பையனிடம் சொல்லவில்லை போலும்! அம்மாவை தேடிப்பார்த்தும் காணாமல் திகைத்த சிறுவன், கடைசியாக பொலிசாரை அழைத்திருக்கிறான்.

ஜேர்மானியர்கள் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக வீடுகளில் முடங்கியுள்ள நேரத்தில் ஒரு சிறுவனின் மன நிலைமை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொண்ட பொலிசார் உடனடியாக அவனது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் வெறும் கையுடன் வரவில்லை. பிரெட்டும், சாக்லேட் ஸ்பிரெடும் வாங்கிக் கொண்டு வந்து அந்த சிறுவனை சமாதானம் செய்துள்ளார்கள் அவர்கள்.

சற்று நேரத்தில் வெளியே சென்றிருந்த அவனது தாய் வீடு திரும்ப, அவரிடம் மகனை பத்திரமாக ஒப்படைத்துவிட்டு பிற பணிகளைத் தொடர திரும்பியிருக்கிறார்கள் பொலிசார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்