மோசமாக தரையிறங்கியதால் தீ பிடித்த விமானம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட 163 பயணிகள்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியில் பயணிகள் விமானம் ஒன்றில் தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால், பயணிகள் அனைவரும் அவசர பாதையின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

துருக்கியின் குறைந்த கட்டண விமான நிறுவனமான பெகாசஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 என்கிற பயணிகள் விமானமானது, இஸ்தான்புல்லிலிருந்து 163 பேருடன் புறப்பட்டு ஜேர்மனியில் கடுமையாக தரையிறங்கியுள்ளது.

இதன்விளைவாக சக்கரம் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. உடனடியாக பயணிகள் அனைவரும் அவசர பாதையின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல இந்த மாத தொடக்கத்தில் இஸ்மீரிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லும் வழியில் ஒரு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானமானது மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சென்றது தீ பிடித்தது.

அந்த விபத்தின் விளைவாக மூன்று பேர் இறந்தனர், மேலும் 179 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்