ஜேர்மனியில் பள்ளத்தில் பாய்ந்த பள்ளிப்பேருந்து: இரண்டு சிறுவர்கள் பலி 21 பேர் படுகாயம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பாதையில் பனி படர்ந்திருந்ததால் வழுக்கிச்சென்ற பள்ளிப்பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில், இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் 20 மாணவர்களும், பேருந்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில் அதிகாலை 7.30 மணியளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி விரைந்த பேருந்து ஒன்று, பனியில் சறுக்கி பள்ளம் ஒன்றில் பாய்ந்துள்ளது.

அந்த பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்திருந்திருக்கிறது. அந்த பகுதியில், காலை நேரங்களில் பனி பெய்வதால் சாலை மோசமாக வழுக்கக்கூடியதாக இருக்கும் என்றும், அப்பகுதி மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மீட்புப் பணியில் பொலிசாரும் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், காயமடைந்த மாணவர்களும், சாரதியும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த பேருந்து தினமும் 12 கிலோமீற்றர்கள் பயணித்து, Berka vor dem Hainich என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு மாணவர்களை சுமந்து செல்லுமாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...