இறுகும் ஈரான் - அமெரிக்க விவகாரம்: டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஈராக்கை மிரட்டுவது அமெரிக்காவுக்கு உதவாது என்று ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.

பாக்தாத் விமானம் நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

வெளிநாட்டுப் படைகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அரசு அழைப்பு விடுத்த தீர்மானம் ஒன்றுக்கு இராக் நாடாளுமன்றம் சாதகமாக வாக்களித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கப் படைகளை ஈராக் வெளியேற்றினால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டுமின்றி ஈராக்கைவிட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறுவது ஒன்றும் சுமூகமாகவும் இருக்காது என எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் அணுகுமுறை உதவாது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறும்போது, ஈராக்கை இவ்விவகாரத்தில் மிரட்டுவது அமெரிக்காவுக்கு உதவாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்