ஜேர்மனி: 4ல் ஒரு குழந்தை மனநோயால் பாதிக்கப்படுகின்றது- ஆய்வு

Report Print Abisha in ஜேர்மனி

ஜேர்மனியில் 4ல் ஒரு குழந்தை மனநோயால் பாதிக்கப்படுவதாக, உடல்நலனுக்கான இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமான DAK நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி 24 சதவிகித குழந்தைகளுக்கு மன நோய் பிரச்னை இருப்பதாக கூறப்படுகின்றது. 10லிருந்து 17 வயதுடைய குழந்தைகளில் 2சதவிகிதத்திற்கும் குறைவானர்களுக்கு மனச்சோர்வும். 2.2 சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கு கவலையால் ஏற்படும் பிரச்னையும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மனநோய் என்பது கடந்த ஆண்டுகளைவிட 2017ஆம் ஆண்டில் 5 சதவிகிதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு பகிரும் பொதுவான நோய்களான தோல்வியாதி, சுவாச பிரச்னை போற்றவற்றில் மன நோய் 5வது இடத்தில் உள்ளது.

மனச்சேர்வு மனநோய்களில் மிகச்சிறி பங்குமட்டுமே வகிக்கின்றது. வளர்ச்சியில் குறைபாடு நடத்தையில் மாற்றம் போன்றவை பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆண் குழந்தைகள் மன அழுத்ததால் பாதிக்கப்படுவதைவிட பெண் குழந்தைகள் அதிக மன அழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 17 சதவிகித மன நோயளிகளுக்கு 2017ஆம் ஆண்டில் மனச்சேர்வு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகமான உடல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு மன அழுத்ததால் பாதிக்கபடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், பெற்றோர் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாலும் அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் என்று DAK ஆய்வில் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்