கிழக்கு பெர்லினில் 250 கிலோ வெடிகுண்டு செயலிழப்பு: போக்குவரத்து பாதிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கிழக்கு பெர்லினில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று மதியம் Hellersdorf பகுதியில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டது.

அதை செயலிழக்கச் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டார்கள், பேருந்துகள் பல தாமதமாகின.

Alt-Hellersdorf சாலையில், கட்டுமானப்பணியின்போது அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மதியம் 12 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் அது செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அந்த 250 கிலோ எடையுள்ள அந்த குண்டு, வியாழன் அன்று கட்டுமானப்ப்ணியின் இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பல மணி நேர ஆய்வுக்குப்பின், அந்த வெடிகுண்டை அங்கிருந்து எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பது தெரியவர, அதை அங்கேயே செயலிழக்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

காலையில், அப்பகுதியில் ஒரு ட்ரக்கில் பொருத்தப்பட்ட ஒலிப்பெருக்கி மூலம் அந்த பகுதி மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கட்டுமானப்பணிகளின் போது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது, ஜேர்மனியில் சாதாரண நிகழ்வாகிவிட்டது.

இரண்டாம் உலகபோரின் போது, கிழக்கு பெர்லினிலுள்ள Marzahn பகுதியில் அதிக அளவில் குண்டுகள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்