தோல்வியில் முடிந்த ஓரினச்சேர்க்கை பெங்குயின்களின் முயற்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் உயிரியல் பூங்காவின் நட்சத்திர ஜோடியான Skipper மற்றும் Ping என்னும் ஓரினச்சேர்க்கை பெங்குயின்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தன.

ஆனால், அவற்றிற்கு இந்த வாரம் ஒரு சோக செய்திதான் கிடைத்தது. ஆம், Skipperம் Pingம் ஒரு முட்டையை தத்தெடுத்து அதை அடைகாக்கும் முயற்சியில் இறங்கின.

ஆனால் அந்த முட்டை நேற்று உடைந்துபோனதாக உய்ரியல் பூங்கா தெரிவித்துள்ளதோடு, அதில் குட்டி எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதையடுத்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தங்கள் முட்டையை சரியாக பாதுகாக்காமல், அவ்வப்போது உடைத்துவிடும் ஒரு ஜோடியிடமிருந்து இந்த முட்டை பெறப்பட்டது.

தங்களுக்கு ஒரு குட்டி வேண்டும் என்பதற்காக, கல் ஒன்றை அடைகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட Skipper, Ping ஜோடியைக் கண்ட உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்கு இந்த முட்டையைக் கொடுத்திருந்தனர்.

ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக பலனைக் கொடுக்கவில்லை. என்றாலும் அவைகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என நம்புவதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்