ஜேர்மானிய சிறுவனை ஓடும் ரயில் முன் தள்ளிய நபர் குறித்த சமீபத்திய தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானிய சிறுவனை ஓடும் ரயில் முன் தள்ளிய நபர், மன நலப்பிரச்சினை கொண்டவர் என நேற்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரித்ரியாவைச் சேர்ந்த Habte A. (40) கடந்த மாதம் எட்டு வயது சிறுவன் ஒருவனை ஓடும் ரயில் தள்ளி விட்டதில் அவன் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Habteக்கு ’paranoid schizophrenia’ என்னும் மன நல பிரச்சினை இருப்பதாக நேற்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே அவர் மன நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் Habteயின் பிரச்னை உச்ச நிலையில் இருந்ததாகவும், தனது செயல்களை கட்டுப்படுத்தும் நிலையில் அவர் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Habte ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்பதும், அவர் சுவிட்சர்லாந்தில் 13 வருடங்களாக வசித்து வருபவர் என்றும் தெரியவந்தது.

கடந்த ஆண்டு முதல் அவர் சூரிச் போக்குவரத்து துறையில் ட்ராம் பழுது பார்ப்பவராக வேலை செய்து வந்துள்ளார்.

திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான Habte, இந்த ஆண்டு துவக்கத்தில் மன நல சிகிச்சைக்குட்பட்டதாகவும், சுவிஸ் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் நடந்தபோது ரயில் முன் தள்ளப்பட்ட அந்த சிறுவனின் தாய், ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள இடத்தில் பதுங்கியதால் உயிர் தப்பியதும் அவரது மகன் மீது ரயில் ஏறியதில் அவன் சம்பவ இடத்திலேயே பலியானதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்