ஜேர்மனியின் ஆதரவு எப்போதும் இருக்கும்.. பாலஸ்தீன ஜனாதிபதிக்கு உறுதியளித்த ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Kabilan in ஜேர்மனி
50Shares

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து, பாலஸ்தீன ஜனாதிபதியிடம் ஏஞ்சலா மெர்க்கல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரே-பாலஸ்தீன பிரச்சனை அமெரிக்கா நடுநிலை வகிக்கவில்லை என்பதால், மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புகளில் ஐரோப்பா முக்கிய பங்கு வகிக்க அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, இலக்கை அடைவது மிகவும் கடினம் என்றாலும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இருதரப்பு இடையேயான மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று மெர்க்கல் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் போது மெர்க்கல் கூறுகையில், ‘பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும்.

பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்கு மிகப்பெரிய இருதரப்பு சர்வதேச நன்கொடையாளராக, பொருளாதார வளர்ச்சிக்கும், மனித சமூகத்தை பலப்படுத்துவதற்கும் ஜேர்மனி தொடர்ந்து ஆதரவளிக்கும்’ என தெரிவித்தார்.

அப்போது பேசிய பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், 1967யில் இருந்தே பேச்சுவார்த்தைக்கு பாலஸ்தீனியர்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் பக்கம் நிற்பதாகவும் விமர்சித்தார்.

அத்துடன், இந்த விடயத்தில் ஜேர்மனி ஒருதலைபட்சமாக செயல்படாமல் நடுநிலையாக இருந்து ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்