ஜேர்மன் நகரம் ஒன்று அறிவித்துள்ள வேடிக்கையான போட்டி: அதற்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஜெயிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசும் வழங்கப்பட உள்ளது.

அது என்ன போட்டி தெரியுமா?

அதாவது ஜேர்மனியில் Bielefeld என்னும் நகரமே உண்மையில் இல்லை என்னும் சர்ச்சைக் கருத்து 25 ஆண்டுகளாக நிலவி வருகிறது.

1994ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாணவர் ஒருவர், Bielefeld என்னும் நகரம் உண்மையில் இல்லவே இல்லை என்னும் வதந்தியை கிளப்பி விட்டார்.

ஆனால் 9ஆம் நூற்றாண்டு முதலே இருக்கும் Bielefeld நகரில் 340,000 பேர் வாழ்கிறார்கள்.

எனவே, Bielefeld என்னும் நகரமே உண்மையில் இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசு வழங்கப்படும் என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 5ஆம் திகதிக்குள் Bielefeld என்னும் நகரமே உண்மையில் இல்லை என நிரூபிப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும்.

ஒருமுறை, ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், பெர்லினில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழா ஒன்றில், தான் Bielefeld நகருக்கு சென்றுவந்ததாக குறிப்பிட, கூட்டத்தில் பலத்த வெடிச்சிரிப்பு ஏற்பட்டது.

அப்போது அவர் Bielefeld என்னும் நகரம் உண்மையில் இருக்கிறது என்றும், மீண்டும் ஒருமுறை தான் அங்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்