கத்தை கத்தையாக பணம்... ஜேர்மனியில் மர்ம நபர் வினியோகித்த அதிசய பை

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் மர்ம நபர் ஒருவர் கத்தை கத்தையாக பணம் நிரப்பிய பைகளை குறிப்பிட்ட பகுதியில் வினியோகித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த அதிசய பைகளில் மொத்தம் 200,000 யூரோ தொகை இருந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பையிலும் சுமார் 20,000 யூரோ முதல் 100,000 யூரோ வரை நிரப்பப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூர் பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த தொகை, எந்த தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலும் அதில் தெரியப்படுத்தி இருந்தது.

பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைத்தல், சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட அறிவுறுத்தலே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வட-மத்திய பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே இந்த அதிசய பை மர்ம நபரால் வினியோகிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 200,000 யூரோ அளவுக்கு பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த மர்ம நபர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல செயலுக்கு ஆபத்து ஏற்படுத்த விரும்பவில்லை என உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 வரையான காலகட்டத்தில் சுமார் 250,000 யூரோ அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அந்த மர்ம நபரால் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers