இரவில் அசாதாரண சத்தம் கேட்பதாக புகாரளித்த மக்கள்: தேடிச்சென்ற பொலிசார் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இரவில் பயங்கரமான சத்தம் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாக ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, அது எதனால் என கண்டறிவதற்காக களமிறங்கிய பொலிசார் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியமடையச் செய்தது.

ஜெர்மனியின் Augsburg பகுதியில்சில மாதங்களாகவே இரவு நேரத்தில் கேட்கும் ஒரு அசாதாரண சத்தம் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாக, தொடர்ந்து பொதுமக்கள் புகாரளித்து வந்தனர். ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வரவே அது எதனால் ஏற்படும் சத்தம் என்பதைக் கண்டறிவதற்காக பொலிசார் களமிறங்கினர்.

சிலர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பாலுறவு கொள்ளும்போது ஏற்படும் சத்தம் என்றும், சிலர் காயப்பட்ட விலங்கு ஒன்று எழுப்பும் சத்தமாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.

புகாரை ஏற்று சென்ற குழுவினரில் சில பொலிசார் Augsburgஇலுள்ள பள்ளி ஒன்றிற்கு சென்று சோதனை செய்தபோது, அந்த சத்தம் விளையாட்டு மைதானத்தில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சென்ற பொலிசார், பெரிய விளக்கு ஒன்றை எரியச் செய்தபோதுதான், அவர்களுக்கு சத்தம் எதனால் வருகிறது என்பது தெரியவந்தது.

அங்கு ஒரு மூலையில் hedgehogs எனப்படும் முள்ளம்பன்றிகளைப்போன்ற, முள்ளெலிகள் இனப்பெருக்கத்திற்கான முயற்சியில் இறங்கியிருப்பது தெரிய வரவே, அமைதியாக விளக்குகளை அணைத்துவிட்டு, அவைகளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர் பொலிசார்.

அதேபோல் Kamenz என்ற இடத்தில், தீயணைப்புப் படையினர் குவிந்து கிடந்த துணிகளுக்கிடையிலிருந்து வரும் சத்தம் என்ன என்பதை அறிவதற்காக, கருவி ஒன்றின்மூலம் அந்த துணிகளை அகற்றியபோது, அங்கும் ஒரு ஜோடி முள்ளெலிகள் இனப்பெருக்கத்திற்காக இணையும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இறங்கிய பொலிசார், சந்தேகத்திற்குரிய அந்த சத்தம், இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில், முள்ளெலிகள் பாலுறவு கொள்ளும்போது ஏற்படும் சத்தம்தான் அது என்பது தெரியவந்தது என தங்கள் அறிக்கையில் எழுதி வைத்தனர்.

கோடை தொடங்கியதிலிருந்தே, பொலிசாருக்கு இதேபோல் ஏராளம் புகார்கள் வரத்தொடங்கின.

முள்ளெலிகள் இனப்பெருக்கம் செய்யும் நேரத்தில் மிக சத்தமாக ஒலி எழுப்பக்கூடியவை, சில நேரங்களில் மனிதர்கள் கூச்சலிடுவது போல் கூட அவை ஒலி எழுப்பும் என, Ludwig Maximilian பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப்பிரிவு நிபுணர்கள் தெரிவித்தனர்.

கோடையில்தான் முள்ளெலிகள் இனப்பெருக்கம் செய்யும் என்பதால், அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் என அவர்கள் பொலிசாரையும், தீயணைப்பு வீரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers