ஜேர்மனியில் ஓடும் ரயிலில் சிறுவனை தள்ளிவிட்டு கொன்ற நபரின் புகைப்படம் வெளியானது!

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் பிராங்க்ஃபர்ட் ரயில் நிலையத்தில் சிறுவனை ரயில் மீது தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எரித்ரியா நாட்டவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் தொழிலாளர் முகமை ஒன்றால் கொண்டாடப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

40 வயதான ஹப்தே அராயா என்பவரே பிராங்க்ஃபர்ட் ரயில் நிலையத்தில் சிறுவனை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எரித்ரியா நாட்டவர்.

2017 ஆம் ஆண்டு சுவிஸ் தொழிலாளர் முகமை வெளியிட்டுள்ள சிற்றேடு ஒன்றில் இவரது புகைப்படம் வெளியிடப்பட்டதுடன்,

சுவிஸ் மக்கள் தொடர்பில் அவர் கூறிய கருத்துகளையும் அப்போது பதிவு செய்திருந்தனர்.

அதில், சுவிட்சர்லாந்துக்கு சென்ற புதிதில் மொழி பிரச்னை இருந்ததாகவும், ஆனால் தற்போது அது ஒரு பிரச்னையே இல்லை எனவும், அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் உதவும் மனப்பாண்மையுடன் செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, சுவிஸ் கல்வி முறையை புகழ்ந்து பேசிய அராயா, எனக்கு கிட்டாத வாழ்க்கையை எனது பிள்ளைகளுக்கு வழங்க சுவிஸ் கல்வி முறை பேருதவியாக உள்ளது என்றார்.

மேலும் சூரிச் போக்குவரத்து துறையில் அடுத்த 25 ஆண்டுகள் பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்