இந்தியா தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜேர்மன் அரசின் முக்கிய அறிவுறுத்தல்!

Report Print Arbin Arbin in ஜேர்மனி

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஜேர்மன் அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் இப்ராகிம் அசார் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலை அடுத்து துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் அரசும் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளை விரைவில் திரும்புமாறு அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பிச் செல்லுமாறு உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜேர்மன் அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற மத்திய அரசு அறிவித்ததால் ஜேர்மன் அரசு இந்த உத்தரவை அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என ஏற்கனவே இங்கிலாந்து அரசும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers