ஒட்டு கேட்பதை நிறுத்துங்கள்: கூகுளுக்கு ஜேர்மனி உத்தரவு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் கூகுள் மென் பொருள் ஒன்று பதிவு செய்யும் தகவல்களை, கூகுள் நிறுவன ஊழியர்கள் ஒட்டுக் கேட்பதாக தகவல் வெளியானதையடுத்து, ஒட்டுக் கேட்பதை நிறுத்துமாறு ஜேர்மனி கூகுளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை, ஹாம்பர்க் தரவு பாதுகாப்பு ஆணையர் தொடங்கிவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின்படி மூன்று மாதங்கள் என்பது, அனுமதிக்கப்படும் அதிகபட்ச காலக்கெடுவாகும்.

இதற்கிடையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 28இலும், மனிதர்கள் உரையாடல்களை ஆய்வு செய்வதை நிறுத்தப்போவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இம்மாத துவக்கத்திலேயே, Google Assistant என்னும் மென்பொருளால் பதிவு செய்யப்பட்ட டச்சு மொழி உரையாடல்கள் கசிந்தது தெரியவந்தது.

அந்த பதிவுகளில் காதலர்கள் மற்றும் சிறுவர்களின் உரையாடல்களிலிருந்து, முகவரி போன்ற தகவல்கள் வரை பதிவாகியிருந்தது.

இந்த தகவல் வெளியானதையடுத்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழுமையான மீளாய்வுகளைத் தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்