ஓடும் ரயில் முன் பெண்ணை தள்ளி விட்ட இளைஞர்: திட்டமிட்ட சதியா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஓடும் ரயில் முன் பெண் ஒருவரை ஒரு இளைஞர் தள்ளி விட்டதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அந்த நபர் அந்த பெண்ணுக்கு அறிமுகமில்லாதவர் என்றும், அந்த செயல் ஒரு திட்டமிட்ட சதி என்றும் ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த 34 வயது பெண்ணை மீட்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் நடந்தது Duisburgக்கு 26 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Voerde ரயில் நிலையத்தில்.

அந்த 28 வயது நபர் திட்டமிட்டே அந்த பெண்ணை தள்ளி விட்டதாக தெரிகிறது. உயிரிழந்த பெண் North Rhine-Westphaliaவிலுள்ள Voerdeயைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

அதிகாரிகள் அந்த சம்பவத்தை கொலையா என்னும் ரீதியில் விசாரிக்க தொடங்கியுள்ளார்கள்.

ஆதாரங்களை சேகரிப்பதற்காக அந்த ரயில் பாதை பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. அந்த பெண்ணை தள்ளி விட்ட நபருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் முன்பின் அறிமுகம் இல்லை என தெரியவந்துள்ளதோடு, ரயில் நிலையத்திலும் அவர்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பொலிசாரைப் பொருத்தவரையில், அந்த பெண்ணை தள்ளிவிட்ட அந்த நபர் Wesel மாகாணத்திலுள்ள Hamminkelnஐச் சேர்ந்தவர் ஆவார். அவர் அந்த பகுதி பொலிசாருக்கும் நன்கு அறிமுகமானவர்.

குறிப்பிட்ட நபரை பொலிசார் வரும்வரை ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் பிடித்து வைத்திருந்ததாக தெரிகிறது.

பொலிசார் அந்த நபர் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையிலும், அவர் பொலிசாரிடமோ நீதிபதியிடமோ தன் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்