48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் 48 மணி நேர தேனிலவு கொண்டாட்டத்தில் கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மையால் மனைவி மரணமடைந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 52 வயது ரால்ஃப் ஜான்கஸ் என்பவருக்கு ஒன்றரை ஆண்டுகால இடைநிறுத்தப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிய நேரத்தில் தமது 49 வயதான மனைவி கிறிஸ்டலை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தியிருந்தால், உயிர் தப்பி இருக்கலாம் எனவும்,

ஆனால் இதில் திட்டமிட்ட கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அதனால் கொலைப்பழி சுமத்தவில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர் தரப்பு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனைக்கு கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் தண்டனையை மட்டுமே விதித்துள்ளது.

மேலும் கடந்த 7 மாத காலமாக விசாரணை கைதியாக சிறையில் இருந்த ரால்ஃப் ஜான்கஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமது கணவருடன் BDSM எனப்படும் விபரீத விளையாட்டுக்கு கிறிஸ்டல் ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி,

தமது தோழிகள் இடையே நடக்கும் பாலியல் விளையாட்டு தொடர்பான விவாதம் குறித்தும் அவர் ஜான்கஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2 நாட்கள் தொடர்ந்த பாலியல் கொண்டாட்டத்தின் இறுதியில் தமது மனைவி காயம் பட்டிருப்பது தமக்கு தெரியாது எனவும், அது தொடர்பில் அவர் தம்மிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனவும் ஜான்கஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஜான்கஸ் பயன்படுத்திய பாலியல் பொம்மையானது மருத்துவர்களால் நரம்புகளின் செயல் திறன் குறித்து ஆராய பயன்படுத்தும் Wartenberg wheel என தெரியவந்துள்ளது.

இதனாலையே கிறிஸ்டல் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் ஆபத்தான கட்டத்திற்கு தள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து உதிரபோக்கு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்தே அவர் நான்கு நாட்களுக்கு பின்னர் மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

பொலிஸ் விசாரணையில், தமது மனைவியின் முழு சம்மதத்துடனே BDSM எனப்படும் விபரீத விளையாட்டில் ஈடுபட்டதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக தாம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதும் ஜான்கஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்