ஜேர்மனி அரசின் மீது வழக்கு தொடர்ந்த ஐ.எஸ் போராளியின் மனைவி: சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி அரசு, ஐ.எஸ் போராளி ஒருவரின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜேர்மனிக்கு அழைத்துக் கொண்டுவர வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்தார் ஜேர்மனி அரசின் மீது வழக்கு தொடர்ந்ததையடுத்து பெர்லின் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

சிரியாவிலுள்ள அகதிகள் முகாமில் இருந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அந்தப் பெண் ஜேர்மனிக்கு திரும்புவதற்கு அதிகாரிகள் உதவ மறுத்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தார் வெளியுறவு அமைச்சகம் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜேர்மனி வரலாற்றிலேயே இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சில குழந்தைகளை திருப்பி அழைத்துக் கொள்ள ஜேர்மனி முன்வந்துள்ளதேயொழிய, அவர்களது தாய்மார்களை அல்ல.

காரணம் அந்த பெண்களும் தீவிரவாத சிந்தனைகளைப் பெற்றிருக்கலாம், அவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் தாய்மார்கள் திருப்பி அழைக்கப்படவில்லை.

இந்த வழக்கைப் பொருத்தவரையில், நடவடிக்கை எடுக்காவிட்டால் மூன்று குழந்தைகளும் மோசமான வகையில் பாதிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பெண்ணின் பிள்ளைகள், முறையே எட்டு, ஏழு மற்றும் இரண்டு வயதுடையவர்கள் ஆவார்கள்.

அந்த பெண் Lower Saxony ஃபெடரல் மாகாணத்தைச் சேர்ந்தவராவார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்