ஜேர்மனியில் ஹெலிகொப்டர் விபத்தில் விமானி பலி: ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பழமையாகிப்போன ராணுவ தளவாடங்கள் அனைத்தையும் ஒதுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Hanover நகரில் நேற்று இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ஜேர்மன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்த இரு விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் Ursula von der Leyen உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராணுவத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் பழமையாக உள்ளதாகக் கோரி, அவைகளை நவீனப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த வாரத்தில் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட நிலையில், இந்த ஹெலிகொப்டர் விபத்து ஒரே வாரத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்