குடியுரிமைச் சட்டங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள ஜேர்மனி!

Report Print Kavitha in ஜேர்மனி

ஜேர்மனி அரசு, தீவிரவாதக் குழுக்களில் சேருவோர், பலதார மணம் செய்வோர், குடியுரிமை பெறுவதற்காக மோசடி செய்வோர் ஆகியோர் குடியுரிமை பெற இயலாதவகையில் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஜேர்மன் நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டத்தில் மூன்று சட்ட திருத்தங்களைக் நிறைவேற்றியது.

தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோரின் குடியுரிமை பறிக்கப்படும்.

வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் தங்கள் ஜேர்மன் குடியுரிமையை இழக்க நேரிடலாம்.

இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட வயது வந்தோருக்கு மட்டுமே, இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

பலதார மணம் புரிவோருக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்படாது.

பலதார மணம் என்பது ஜேர்மன் சட்டத்துக்கு விரோதமானதாகும். குடியுரிமை பெறுவதற்காக பலதார மணம் புரிவோரை தடுக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மோசடி செய்து குடியுரிமை பெறுவோரின் குடியுரிமை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.

சட்ட மாற்றத்தின்படி மோசடி செய்து குடியுரிமை பெறுவோரின் குடியுரிமை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும். இதற்கு முன்பு இந்த வரம்பு ஐந்து ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்