ஏஞ்சலா மெர்க்கல் கூட்டணி கட்சியின் தலைவர் யார்? விறுவிறு ஆலோசனைக் கூட்டம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் முக்கிய கூட்டணி கட்சியான SPD-யின் தலைவர் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய தேர்தல்களில் தனது கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, SPD கட்சியின் தலைவர் Andrea Nahles திடீரென பதவி விலகினார்.

அத்துடன் ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டணியில் இருப்பது குறித்து, அவரது கட்சி உறுப்பினர்களே கடுமையாக அவரை விமர்சித்தனர். ஆனால், Andrea Nahles முடிவை தான் மதிப்பதாக ஏஞ்சலா தெரிவித்தார்.

ஆனாலும், கூட்டணி கட்சியின் தலைவர் திடீர் ராஜினாமா செய்ததால் முன்கூட்டியே தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், Andrea Nahlesக்கு பதிலாக புதிய தலைவரை எப்படி, எப்போது தேர்வு செய்வது என்பதை முடிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதுவரை யாரும் தங்களை வேட்பாளராக கட்சியின் தலைவர் பொறுப்புக்கு அறிவிக்காத நிலையில், இன்றைய தினம் SPD கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளைப் பற்றி பேச ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது.

மெர்க்கலின் கூட்டணி கட்சியான SPD-யின் தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது, ஜேர்மன் சேன்ஸலரின் அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers