ஜேர்மனி நிலக்கரிச் சுரங்கத்தில் குவிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: திணறும் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

விரும்பத்தகாத சீதோஷ்ண மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மேற்கு ஜேர்மனியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றினுள் நுழைந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அங்கு குவிந்ததையடுத்து அவர்களை அங்கிருந்து அகற்ற பொலிசார் திணறி வருகின்றனர்.

Garzweiler பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் என்னும் அந்த சுரங்கத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்ற பொலிசாரைத் தள்ளிக்கொண்டு மக்கள் சுரங்கப்பகுதிக்குள் நுழைந்தனர்.

சுரங்கப்பகுதி பாதுகாப்பானதல்ல என்று பொலிசார் எச்சரித்தும் பலன் எதுவுமில்லை. இதற்கிடயில் போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக சில பொலிசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

2050வாக்கில் கார்பன் பயன்பாடு நிறுத்தப்படும் என்று ஜேர்மன் அரசு அறிவித்திருந்தாலும், உடனடியாக நடவடிக்கையில் இறங்க சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஜேர்மனியில் சமீப காலமாகவே சுற்றுச்சூழல் மீதான அக்கறை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு, பசுமைக் கட்சி போன்ற கட்சிகளும் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் நிலக்கரியை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளிலும் மறியல் செய்வதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers