தீவிர வலதுசாரிகளை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் திகதி வால்ட்டர் லியூப்கே(65) என்பவர் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை தீவிர வலதுசாரி மற்றும் அகதிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள நபர் கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஸ்டீபன் எர்னஸ்ட்(45) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
வலதுசாரி தீவிரவாதியாக கருதப்படும் ஸ்டீபன் எர்னஸ்ட் மீது, 1980ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், டார்ட்மண்டில் லூதரன் புராடெஸ்டண்ட் கூட்டம் ஒன்றில் ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
‘தீவிர வலதுசாரிகளை எந்த விட தடையும் இன்றி, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் தீவிர வலதுசாரியை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரித்தது. அப்போது புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் ஏஞ்சலா மெர்க்கலின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர், கொல்லப்பட்ட வால்ட்டர் லியூப்கே என்பது குறிப்பிடத்தக்கது.