பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்..! ஹுவாய் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஜேர்மனி

Report Print Kabilan in ஜேர்மனி

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹுவாய், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ஜேர்மனியின் நிதியமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

ஜேர்மனியின் நிதியமைச்சர் பீட்டர் ஆல்ட்மையர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்றைய தினம் ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

5ஜி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் இருந்து ஹுவாய் நிறுவனத்தை தடை செய்ய அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவுக்கின் அழுத்தத்திற்கு எதிராக நிற்கும் ஜேர்மனி, ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டுகிறது.

சீனாவின் உளவு நோக்கங்களுக்காக ஹுவாய் நிறுவனத்தை தவறாக பயன்படுத்தலாம் என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதேபோல் உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் Shenzhenஐ தளமாகக் கொண்டு ஹுவாய் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான், சீனாவில் செயல்படும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஒரு நிலை விளையாட்டுத் துறையை உருவாக்குவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த, ஜேர்மனி நிதியமைச்சர் ஆல்ட்மையர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், தகவல் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஹுவாய் நிறுவன தலைமை செயல் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது கூறுகையில், ‘தொலைத்தொடர்பு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்பதை நான் மிகத் தெளிவுபடுத்தினேன்.

எல்லா ஆப்ரேட்டர்களும் எங்கள் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மற்றும் அவர்கள் அவ்வாறு செய்ய முடிகிறது என்பதை எங்களுக்குக் காண்பிக்க வேண்டியது இப்போது ஹவாயின் கடமையாகும்’ என தெரிவித்தார்.

GETTY

மேலும் பேசிய அவர், ’ஜேர்மனியின் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலங்களை சமர்பித்த நிறுவனங்கள், பாதுகாப்பு சான்றிதழ்களை வைத்திருந்தால் மட்டுமே கூறுகளை நிறுவ அனுமதிக்கப்படும்.

தொலைத்தொடர்புகளின் பாதுகாப்பு, குடிமக்களின் தரவுகளைப் பாதுகாத்தல் ஆகியவை ஜேர்மன் சட்டத்தின் உறுதிபாட்டுடன் ஜேர்மனியில் கடைபிடிக்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.

அத்துடன், Hardware மற்றும் Software சான்றிதழ் மூலம் தெளிவான பாதுகாப்பு அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers