இந்த ஜேர்மன் நகரத்தில் இனி இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்று, காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் இலவச பேருந்து திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

2020 ஏப்ரலில் இருந்து ஜேர்மன் நகரமான Monheimஇல் வசிப்போர், பேருந்தில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

காற்று மாசுவைக் குறைக்கும் நோக்கில், மக்கள் தங்கள் கார்களை வீட்டில் விட்டு விட்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஜேர்மன் அரசு தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் பொதுப்போக்குவரத்தை அறிமுகம் செய்யும் திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, Bonn, Essen, Herrenberg, Mannheim மற்றும் Reutlingen ஆகிய ஐந்து ஜேர்மன் நகரங்கள் மிக மலிவான நிலையில் கட்டணங்களை நிர்ணயித்து பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை எளிமையாக்கின.

இதற்கிடையில் இன்னும் ஒருபடி மேலே சென்று Monheim நகரம், பொதுப்போக்குவரத்தை இலவசமாக்கி, இலவச போக்குவரத்தை வழங்கும் முதல் நகரம் என்னும் பெயரை அடைய இருக்கிறது.

சுமார் 55 சதவிகிதம் குடிமக்கள் இன்னும் தங்கள் கார்களை பயன்படுத்தும் நிலையில், வெறும் 20 சதவிகிதம் பேர் மட்டுமே சைக்கிளிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிக்கிறார்கள், எனவே பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீதோஷ்ண மாற்றம் தொடர்பாக நாமும் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்பதற்காக, மாசுவைக் கட்டுப்படுத்துவது என உறுதி பூண்டுள்ளோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

அதே நேரத்தில், ஏற்கனவே பேருந்துகள் நிரம்பி வழியும் நிலையில், இலவச பேருந்து திட்டத்தை அதிகரிக்க வேண்டுமானால், அதற்காக திட்டமிடுதலும் முதலீடும் அதிகம் தேவை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்